போலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்

இந்தியாவில் போலி செய்திகள் பதிவிடப்படுவதைத் தவிர்க்க கூடுதலாக 5 நிறுவனங்களை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பணிக்கு அமர்த்தியுள்ளது.


ஃபேஸ்புக் என்பது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்பதெல்லாம் இல்லை. சமூக வலைதளங்களும் தற்போது ஒரு ஊடகத்தின் எதிரொலி தான். சமூக வலைதளங்கள் மூலம் எந்த செய்தியும் நொடிப்பொழுதில் எல்லாரிடமும் போய்ச் சேர்கிறது. அதேபோல் போலி செய்திகளும் எளிதில் மக்களிடத்தில் சென்றடைகிறது என்பது தான் பிரச்னை. இதனை தடுக்க அரசும், சமூக வலைதள நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *