பிக் பாஸ் புகழ் ஓவியாவின் 90ML திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்…
தற்போது, ஓவியா ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய 3 படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஓவியா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
இப்படம் பெண்களை உயர்த்திப் பிடிக்கும் படம் என்றும், ஆண்களை போல பெண்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் என்று அனிதா உதுப் கூறிவருகிறார். ஓவியா துணிச்சலாக ஆண்களை போன்று தம்மு, தண்ணி பழக்கம் உள்ள பியூட்டி பார்லர் லேடியாக நடித்துள்ளார். இவரைப்போலவே பல சூழ்நிலைகளில் வாழும் 5 பேரும் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ்வதாக கதை.