காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 44 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரர்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.


தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு கூடுதல் ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *